புதுச்சேரி, : போத்தீஸ் விழாக்கால போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வாடிக்கையாளர் களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.
புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள போத்தீஸ் நிறுவனத்தின் 10ம் ஆண்டு துவக்க விழாவை யொட்டி, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பரிசுப்போட்டி நடத்தப்பட்டது.பின், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி, விழாக்கால பரிசுப்போட்டி நடந்தது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற 300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பரிசளிப்பு விழா, புதுச்சேரி மெரினா கடற்கரையில் நேற்று நடந்தது.போட்டியில் வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு, 4 ஹீரோ பிளாஷ் எலட்ரிட்க் பைக், மொபைல்போன், லேப்டாப், இன்டக் ஷன் ஸ்டவ், காரவன் ரேடியோ, ஸ்மார்ட் 'டிவி', பிரிட்ஜ், வாஷிங் மிஷின், அயர்ன் பாக்ஸ், கிரைண்டர், மிக்ஸி, எலட்ரிக்கல் ரைஸ் குக்கர், 3 பர்னர் கேஸ் ஸ்டவ், டின்னர் செட் உள்ளிட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.பரிசுகளை போத்தீஸ் பொதுமேலாளர் அருண்மொழி வழங்கினார். நிகழச்சி ஏற்பாடுகளை போத்தீஸ் மேலாளர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.