வெளியாகாத அரசாணை! அவிநாசி-அத்திக்கடவு இரண்டாம் திட்டத்தின் வேதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

02 மார்
2021
02:19
பதிவு செய்த நாள்
மார் 01,2021 23:33

அன்னுார்:அவிநாசி, அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட ஆயிரம் குளம், குட்டைகளை இணைப்பதற்கான இரண்டாம் திட்ட அரசாணை ஒரு வாரத்தில் வெளியாகும் என முதல்வர், அமைச்சர் அறிவித்தும் வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், கோவை புறநகர் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், உள்ள குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பும் அவிநாசி-அத்திக்கடவு திட்டம், 1,652 கோடி ரூபாயில் 2019, டிசம்பர் முதல் நடந்து வருகிறது. இத்திட்டத்தில் அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட அன்னுார் ஒன்றியத்தில் 186 குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்பட உள்ளது. இத்திட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஆயிரம் குளம், குட்டைகள் விடுபட்டு விட்டன. இவை இரண்டாம் திட்டத்தில் சேர்க்கப்படும் என அரசு தெரிவித்தது. ஆனால், தேர்தல் அறிவிப்பு வரும் வரை அரசாணை வெளியாகவில்லை.இதுகுறித்து, அன்னுார் தாலுகா திட்ட ஆர்வலர்கள் கூறியதாவது: இத்திட்டத்தில், கோவை மாவட்டத்தில், அன்னுார், எஸ்.எஸ்.குளம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், சூலுார் ஆகிய ஐந்து ஒன்றியங்கள் பயன்பெறுகின்றன. ஆனால், நுாற்றுக்கணக்கான குளங்கள் விடுபட்டுள்ளன.


குறிப்பாக, இத்திட்டத்திற்கான போராட்டம் முதன் முதலாக உருவான, குப்பேபாளையம் ஊராட்சியில் 11 குளம், குட்டைகள் விடுபட்டுள்ளன. இத்திட்டம் வருமா என்னும் சந்தேகத்தில் பல ஊராட்சிகளில் குளம், குட்டைகளை ஆய்வின்போது தராமல் விட்டு விட்டனர்.அன்னுார் ஒன்றியத்தில், 120 குட்டைகள் விடுபட்டுள்ளன. காரமடை ஒன்றியத்தில், 90 சதவீத குளம், குட்டைகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், 80 சதவீத குளங்கள், இத்திட்டத்தில் இல்லை. பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், ஓர் ஊராட்சி மட்டுமே பயன்பெறுகிறது. சூலுார் ஒன்றியத்திலும் 50 சதவீத குளம், குட்டைகள் விடுபட்டுள்ளன.இத்துடன், அன்னுார் ஒன்றியத்தை ஒட்டியுள்ள, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பவானிசாகர் ஒன்றியத்தில், பெரும்பாலான குளம், குட்டைகள் சேர்க்கப்படவில்லை.


இதுகுறித்து அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, சபாநாயகர் தனபால், முதல்வர் பழனிச்சாமி ஆகியோரிடம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, பல முறை நேரில் மனு கொடுத்து முறையிட்டோம். இதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழு, விடுபட்ட குளங்களை ஆய்வு செய்து, பட்டியல் எடுத்து, அறிக்கை சமர்ப்பித்து ஆறு மாதங்கள் ஆகி விட்டது.கடந்த ஜனவரியில் அன்னுார் வந்த முதல்வர் பழனிசாமி, அத்திக்கடவு இரண்டாம் திட்டத்திற்கு விரைவில் அரசாணை வெளியாகும். என்றார்.


பிப்ரவரியில், அன்னுார் மற்றும் வையம்பாளையத்தில், அமைச்சர் வேலுமணி பேசுகையில், இன்னும் ஒரு வாரத்தில், அத்திக்கடவு இரண்டாம் திட்டத்திற்கு அரசாணை வெளியாகும் என்றார். ஆனால், தேர்தல் அறிவிப்பு வந்து விட்டது.விடுபட்ட ஆயிரம் குளம், குட்டைகளுக்கு விமோசனம் இல்லாமல் போய் விட்டது. இது ஏமாற்றம் அளிக்கிறது. தேர்தலில் வெற்றி பெறும் கட்சி, முன்னுரிமை அடிப்படையில் அத்திக்கடவு இரண்டாம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அன்னுார் தாலுகா மக்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X