ஊட்டி:தேர்தல் பணியில் ஈடுபடும், 4,167 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.நீலகிரியில் மூன்று சட்ட சபை தொகுதிகளில், 868 ஓட்டு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 112 ஓட்டு சாவடிகள் பதற்றமான ஓட்டு சாவடிகளாக கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 வீடியோ பதிவாளர்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,''தேர்தல் பணிக்கு, 4,167 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதில், 2,600 பள்ளி ஆசிரியர்கள், 250 கல்லுாரி பேராசிரியர்கள் உள்ளனர். தவிர, ஓட்டு சாவடிகளில், தெர்மல் ஸ்கேன், கையுறை மற்றும் சானிடைசர் வழங்குவதற்கு பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். பணியில் ஈடுபட உள்ள அனைவருக்கும் இந்த வாரத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.