பந்தலுார்:பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பகுதியில் இறந்து கிடந்த ஆண் யானை குறித்து விசாரணை நடந்து வருகிறது.பந்தலுார் அருகே,நெலாக்கோட்டை சித்தர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள புதர் பகுதியில், நேற்று மதியம் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. அதனை அடுத்து, கூடலுார் வன அலுவலர் ஓம்கார், வனச்சரகர் மனோகரன் தலைமையிலான குழுவினர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். யானை இறந்து மூன்று நாட்கள் ஆகி உள்ளது. கால்நடை டாக்டர்கள் பரத்ஜோதி, டேவிட் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.