திருப்பூர்:தேர்தல் பிரசாரத்துக்கு அச்சிடும் துண்டு பிரசுரங்களின், 10 பிரதிகளை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டுமென, அச்சகங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதும், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின்படி, அரசியல் கட்சியினர், மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்களுக்கு, தேர்தல் விதிமுறைகளின்படி, சில அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.திருமண மண்டபங்கள்தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் காலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து, அதற்கான அழைப்பிதழ்களுடன், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் அளிக்க வேண்டும்.அரசியல் கட்சியின் விருந்து, பரிசு வழங்கும் விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதித்தால், உரிமையாளர் மீதும், சம்பந்தப்பட்ட கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.மண்டபத்தில் அன்னதானம் நடத்தவும் அனுமதி இல்லை. திருமண விழாவில், கட்சி சின்னம், கட்சி கொடிகளுடன் கூடிய பேனர்கள், கொடி வைக்க அனுமதிக்க கூடாது.அச்சகத்துக்கு கட்டுப்பாடுஅச்சிடப்படும் தேர்தல் பிரசார துண்டு பிரசுரம், போஸ்டர் உள்ளிட்டவற்றில், அச்சகத்தின் பெயர், மொபைல் எண், பிரதிகள் எண்ணிக்கை போன்றவை இடம்பெற வேண்டும். போஸ்டர், துண்டு பிரசுரம் உள்ளிட்டவை அச்சிட்டதும், 10 நகல்களை, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டருக்கு, மூன்று நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.அச்சிடப்படும் இனங்களில், இரண்டு பிரதிகளையும், பிரின்டிங் பிரஸ் வழங்கிய ரசீதுகளையும், தங்கள் அலுவலகத்தில் பராமரித்து வரவேண்டும்.
பிரசார துண்டு பிரசுரம், போஸ்டர்கள், வேட்பாளரின் ஒப்புதலுடன் அச்சிடப்பட வேண்டும்; தவறினால், இந்திய தண்டனை சட்டத்தின்படி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.துண்டு பிரசுரங்கள், சுவரொட்டி, விளம்ரபம் ஆகியவற்றில், ஜாதி, மொழி, இன அடிப்படையில் விமர்சிக்கும் வாசகங்கள் இருக்கக்கூடாது. தனி நபர்களை இழிவுபடுத்தும் விமர்சனமும் பிரசுரிக்க கூடாது.இத்தகைய நடைமுறையை மீறினால், தேர்தல் நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.திருப்பூர் வடக்கு தொகுதி அளவிலான, திருமண மண்டப உரிமையாளர் மற்றும் அச்சக உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.