பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ஏ.டி.எம்., மையத்தில் மூதாட்டியை ஏமாற்றி, ஏ.டி.எம்., கார்டு பின் நம்பர் பயன்படுத்தி, பணம் அபேஸ் செய்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டி சேரன் நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி,65. இவரது கணவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி இறந்து விட்டதால், தனியாக வசிக்கிறார். நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றார். பணம் எடுக்க முயற்சித்தும் முடியாததால், அங்கு இருந்த நபர், பணம் எடுத்து தருவதாக கூறி, கார்டு வாங்கி, பின் நம்பரையும் பெற்றதாக கூறப்படுகிறது.அதன்பின், அந்த நபர், வேறொரு கார்டை அந்த மூதாட்டியிடம் கொடுத்து விட்டு, அவரது ஏ.டி.எம்., கார்டை எடுத்துச் சென்றுள்ளார். வேறொரு வங்கி ஏ.டி.எம்., மில், மூதாட்டியின் ஏ.டி.எம்., கார்டு, பின் நம்பரை பயன்படுத்தி, 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார்.பணம் எடுக்காமலே பணம் எடுத்ததாக, மெசேஜ் வந்ததால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு, மூதாட்டியை ஏமாற்றியவர் குறித்து விசாரிக்கின்றனர்.