சிக்னல் பழுதால் சிக்கல்தடாகம் ரோடு, ஜி.சி.டி., அருகில் உள்ள, போக்குவரத்து சிக்னல் பழுதடைந்துள்ளது. வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்கின்றனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- தங்கராஜ், வேலாண்டிபாளையம்.
ரோடு படுமோசம்சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2 பகுதியில், சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.- ஜெனு, ஹவுசிங் யூனிட் பேஸ் -2.
சாக்கடை கால்வாய் அடைப்புகணபதி, அபிராமி நகர், சூர்யா மருத்துவமனை பின்புறம், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் செல்ல வழியின்றி, சாலையில் தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- நரசிம்மன், அபிராமி நகர்.
குப்பை அள்ளுவதில்லைஆவாரம்பாளையம் பகுதிக்கு, துாய்மை பணியாளர்கள் வருவதில்லை. இதனால், ஆங்காங்கே குப்பை குவிந்துள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- அன்பழகன், ஆவாரம்பாளையம்.
குழாய் உடைப்பு; குடிநீர் வீண்மாநகராட்சி, 87வது வார்டுக்கு உட்பட்ட, பாலக்காடு ரோடு, குனியமுத்துார், வகாப் பெட்ரோல் பங்க் எதிரில், பொது குழாய் உடைந்து, குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- ஜாபர், குனியமுத்துார்.
போக்குவரத்து போலீசார் தேவைசுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, இடையர்பாளையம் ரோடு சந்திப்பில், காலை மற்றும் மாலை நேரத்தில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, இங்கு போலீசாரை பணி அமர்த்த வேண்டும்.- குமார், இடையர்பாளையம்.
சாக்கடை கால்வாய் வசதி இல்லைமாநகராட்சி, 57வது வார்டுக்கு உட்பட்ட, பீளமேடு, லட்சுமிபுரம், ரங்கசாமி லே-அவுட்டில், சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.- சந்திரன், பீளமேடு.
வாகன ஓட்டிகள் அச்சம்வெள்ளலுார் - சிங்காநல்லுார் மேம்பாலத்தில் சாலையின் இருபுறமும், மணல் குவிந்துள்ளது. வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.- குருசாமி, வெள்ளலுார்.
சாலையில் ஓடுது கழிவுநீர்மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை பஸ் ஸ்டாண்ட் அருகில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது.- பால்தாஸ், காரமடை.
நாய் தொல்லை அதிகம்பீளமேடு, சூர்யா கார்டன் பகுதியில், தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது. அதிகாலையில் வாக்கிங் செல்வோர் அச்சப்படுகின்றனர்.- உதயகுமார், சூர்யா கார்டன்.