கோவை:கோவை வந்த விமானத்தில், ஒரு கிலோ தங்க கட்டியை கடத்தி வந்த பயணியை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.ஷார்ஜாவில் இருந்து நேற்று அதிகாலை, 'ஏர் அரேபியா' விமானம் கோவை விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர்.இதில், சிவகங்கையை சேர்ந்த பாலு, 39 என்ற பயணியின் கைப்பையில் மொபைல்போன் போன்று மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட, 47.65 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 999 கிராம் அளவிலான தங்க கட்டி இருப்பது தெரிந்து, பறிமுதல் செய்யப்பட்டது.தங்கம் கடத்தி வந்தவரிடம் விசாரித்து கைது செய்த அதிகாரிகள், ஜாமினில் விடுவித்தனர்