கூடலுார்;நீலகிரி மாவட்டம், கூடலுார் வனப்பகுதிகளில், உள்ள மூங்கில்கள், 40 ஆண்டுகளுக்கு பின், பூ பூத்து அதிலிருந்து மூங்கில் அரிசி விளைந்து, உதிர துவங்கியுள்ளன. இதற்கு நல்ல விலை கிடைப்பதால், பழங்குடியினர் உள்ளிட்ட பலரும், அரிசியை சேகரித்து சுத்தம் செய்து, வியாபாரிகளுக்கு விற்கத் துவங்கியுள்ளனர். தற்போது, மூங்கில் அரிசி கிலோ, 450 ரூபாய் என, விற்பனை செய்து வருகின்றனர்.வியாபாரிகள் கூறுகையில்,'மருத்துவ குணம் கொண்ட மூங்கில் அரிசியைஉள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும், ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்' என்றனர்.