வானூர்- புதுச்சேரி-திண்டிவனம் பைப்பாஸ் சாலையில் கிளியனுார் அருகே சாலையோரம் சிலர் கோழிக்கழிவுகளை கொட்டி வருவதால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது.புதுச்சேரி-திண்டிவனம் பைப்பாஸ் சாலை முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. இதன் சாலை வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது. குறிப்பாக சென்னை, திருவண்ணாமலை, செஞ்சி, பெங்களூரு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்கள் செல்கிறது.இந்த சாலையில் சிலர் கோழி, மாடுகளின் கழிவுகளை தாறுமாறாக கொட்டி வருகின்றனர். குறிப்பாக கிளியனுார் அருகேயுள்ள கேணிப்பட்டு, இரும்பை போன்ற பகுதிகளில், சாலையோரம் சிலர் கொட்டியுள்ள கோழிக்கழிவுகள் மலை போல் குவிந்து கிடக்கிறது.இதனால் அப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே டோல்கேட் நிர்வாகத்தினர், அப்பகுதியில் கோழிக்கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.