சுகாதார நிலையத்தில் சிகிச்சையளிக்க மறுப்பு; ஆழியூர் கிராம மக்கள் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
04:36

கண்டமங்கலம் - ஆழியூர் கிராம மக்கள் அருகில் உள்ள கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைபெற விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலத்தில் இருந்து 2.கி.மீ., தொலைவில் ஆழியூர் ஊராட்சி அமைந்துள்ளது. ஆழியூர் கிராம மக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற, அருகில் உள்ள கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குதான் செல்லவேண்டியுள்ளது.கிராமத்தில் இருந்து 2.5 கி.மீ., தொலைவில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல அருகில் உள்ள புதுச்சேரி பகுதியான திருவாண்டார்கோவிலில் இருந்து ஏராளமான பஸ் வசதியும் உள்ளது.ஆனால் கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் செல்லும் நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் பாக்கம் கூட்ரோடு அருகில் உள்ள கோண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குதான் செல்ல வேண்டும். இங்கு சிகிச்சை அளிக்க முடியாது என மறுத்துவிடுகின்றனர். ஆழியூர் கிராம மக்கள் கோண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் செல்ல திருவாண்டார்கோயில், திருபுவனை, மதகடிப்பட்டு, நல்லுார், கொத்தாம்பாக்கம், கரியமாணிக்கம், நெட்டப்பாக்கம், கல்மண்டபம், பாக்கம் கூட்ரோடு வழியே 12 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டும். பைக்கில் குறுக்கு வழியாக சென்றால் 9 கி.மீ., துாரம் செல்ல வேண்டும். இந்த சிரமங்களை கருத்தில்கொள்ளாமல் சுகாதாரத்துறை அரசு அதிகாரிகள் எங்கள் கிராம மக்களை சிரமத்திற்குள்ளாக்கி வருகின்றனர்.எனவே சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆழியூர் கிராம மக்கள் கண்டமங்கலத்தில் சிகிச்சைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X