சிதம்பரம்; தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 24ம் ஆண்டு தையல் கலைஞர்கள் தினத்தையொட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.செயலாளர் நந்தகோபால் வரவேற்றார். நகர செயலாளர் முகிலன், பொருளாளர் ராமதாஸ் உட்பட 300க்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், 60 வயதைக் கடந்த தையல் கலைஞர்கள் அனைவருக்கும் மாதம் 3,000 ரூபாய் வழங்க வேண்டும், குறைந்த விலையில் வழங்கப்படும் 500 யூனிட் மின்சாரம், தையல் கலைஞர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.