கடலுார்; பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சிறப்பு சலுகைகளுடன் கூடிய புதிய பிரீபெய்டு மொபைல் பிளான் 47 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் செய்திக்குறிப்பு:மொபைல் வாடிக்கையாளர்களின் நலனுக்காக பி.எஸ்.என்.எல்., புதிய சிம் பிளான் 47 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் இந்தியா முழுதும் டில்லி, மும்பை உள்ளிட்ட தேசிய ரோமிங்கிலும் கூட வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற இலவச அழைப்புகள் வழங்கப்படுகின்றன.இத்துடன் 14ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வேலிடிட்டி 28 நாட்களும் தினசரி 100 எஸ்.எம்.எஸ்., அனுமதிக்கப்படுகிறது. இந்த சிறப்பு சலுகை வாடிக்கையாளர்களுக்கு வரும் 31ம் தேதி வரை கிடைக்கும்.மொபைல் பிளான் 108 ரூபாயுடன் உடன் கிடைக்கும் சிறப்பு சலுகைகள், 60 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், 60 நாட்கள் முழுதும் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு சலுகையும் வரும் 31ம் தேதி வரை நீடிக்கும்.கொரானா தொற்று காலத்தில் பி.எஸ்.என்.எல்., பாரத் பையர் இணைப்புகள் வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்த அதிவேக இணைய சேவையை வழங்கி வருவதால் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் மிகவும் உதவியாக இருந்து வருகிறது.சமீபத்தில் எப்.டி.டி.ெஹச் திட்டங்களில் 3300 ஜிபி வரை டவுன்லோடு செய்யும் வசதியுடன் 300 எம்.பி.பி.எஸ்., வரை வேகத்துடன் சேவைகள் வழங்கப்படுகின்றன. கூடுதல் சலுகையாக, பி.எஸ்.என்.எல் புதிய பாரத் பையர் வாடிக்கையாளர்களுக்கு 31ம் தேதி வரை இலவசமாக புதிய சிம் வழங்கப்படுகிறது. இந்த சிம்மில் வாடிக்கையாளர்களுக்கு 100 நிமிடத்திற்கான இலவச அழைப்புகள் வரையும் 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. சிம் வேலிட்டி 60 நாட்களாகும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.