வேப்பூர்- அ.தி.மு.க., சார்பில் விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட, 4 ஒன்றிய செயலாளர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர்.வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட அக்கட்சி நிர்வாகிகள் பலர் விருப்ப மனுவை தலைமை அலுவலகத்தில் அளித்து வருகின்றனர்.விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட நல்லுார் வடக்கு ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, விருத்தாசலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலதண்டாயுதம், தெற்கு ஒன்றிய செயலாளர் தம்பிதுரை, கம்மாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சின்ன ரகுராமன் ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.இதேபோன்று, புவனகிரி சட்டசபை தொகுதிக்கு அ.தி.மு.க., சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் போட்டியிட வேண்டும் என, ஒன்றிய செயலாளர்கள் பச்சமுத்து, சின்ன ரகுராமன் ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.ஆவின் நிர்வாக உறுப்பினர்கள் செல்லதுரை, பரசுராமன், ரங்கசாமி, செயலாளர் சங்கர், கிளைச் செயலர்கள் பழனிமுத்து, மதியழகன், ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன், வழக்கறிஞர் குமரேசன் உடனிருந்தனர்.