விருத்தாசலம்; விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட தி.மு.க., வழக்கறிஞரணி தொகுதி பொறுப்பாளர் பாரி இப்ராஹிம் விருப்ப மனு வழங்கினார்.மங்கலம்பேட்டையைச் சேர்ந்தவர் பாரி. தி.மு.க., தலைமைக்கழக பேச்சாளர். இவரது மகன் இப்ராஹிம், வழக்கறிஞர். விருத்தாசலம் சட்டசபை தொகுதி வழக்கறிஞரணி பொறுப்பாளராக உள்ளார். இவர், விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட, சென்னை அண்ணா அறிவாலயத்தில், அமைப்புச் செயலாளர் பாரதியிடம் விருப்ப மனு வழங்கினார்.முன்னதாக, மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ.,விடம் வாழ்த்து பெற்றார். பேரூராட்சி செயலாளர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.