மூணாறு : கேரளாவில் சட்டசபை தேர்தல் ஒரேகட்டமாக ஏப்.6ல் நடக்க உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பிப்.26ல் அமலுக்கு வந்தன. அதன்படி பொது இடங்களில் வைக்கப் பட்டுள்ள விளம்பர போர்டு மற்றும் போஸ்டர் ஆகியவற்றை மார்ச் 3க்குள் (நாளை) அகற்றிவிட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஊராட்சி உதவி இயக்குனர், கட்டப்பனை, தொடுபுழா நகராட்சி செயலர்கள், அனைத்து ஊராட்சி செயலர்கள் ஆகியோருக்கு இடுக்கி மாவட்ட தேர்தல் அதிகாரி தினேசன் உத்தரவிட்டுள்ளார்.----