பிரசாரம், பொதுக்கூட்டங்கள் நடத்த 53 இடங்கள் அனுமதி | தேனி செய்திகள் | Dinamalar
பிரசாரம், பொதுக்கூட்டங்கள் நடத்த 53 இடங்கள் அனுமதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 மார்
2021
05:41

தேனி : மாவட்டத்தில் 53 இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிககள் தேர்தல் பொதுக் கூட்டங்களில் நடத்திக் கொள்ளலாம்,'' என, சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., தெரிவித்துள்ளார்.



அவர் கூறியிருப்பதாவது:சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், பிரசாரங்கள் பொதுக் கூட்டங்கள் நடத்த 53 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் தேனி வட்டாரத்தில் 11, போடி 9, உத்தமபாளையத்தில் 12, ஆண்டிபட்டி 9, பெரியகுளத்தில் 12 இடங்கள் ஆகும். 2 நாட்களுக்கு முன் போலீசாரின் முன் அனுமதி பெறுவது கட்டாயம். இவற்றைத்தவிர வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் பொதுக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்களை நடத்தக் கூடாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X