தேனி : மாவட்ட போலீஸ் துறை சார்பில் சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு கொடியணிவகுப்பு தேனி அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோயிலில் துவங்கியது.
சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., துவக்கி வைத்தார். டி.எஸ்.பி.,கள் முத்துராஜ் (தேனி), இளமாறன் (ஆயுதப்படை), மத்திய தொழில் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அமீர்சிங், இன்ஸ்பெக்டர்கள் ராமலட்சுமி (தேனி), விக்டோரியா லுார்து மேரி (தேனி), சஜூ (ஆயுதப்படை), விஜயகாந்த் (ஆயுதப்படை வாகனப்பிரிவு), மதனகலா (அல்லிநகரம்), சுப்புத்தாய் (அல்லிநகரம்), 14 எஸ்.ஐ.,க்கள், சப்-டிவிஷன் போலீசார், ஆயுதப்படை போலீசார் 70 பேர், பாட்டாலியன் போலீசார் 20 பேர், மத்திய தொழில் பாதுகாப்பு படைப்பிரிவு வீரர்கள் 60 பேர் என பங்கேற்றனர். பெத்தாட்சி விநாயகர் கோயில் வழியாக சென்ற அணிவகுப்பு பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து, மதுரை ரோடு பங்களாமேட்டில் நிறைவடைந்தது.