திருநகர் : ருப்பரங்குன்றம் தேவிநகர் நிலையூர் கால்வாயையொட்டிய ரோட்டில் பாலாஜிநகர், பாலசுப்பிரமணியன் நகர், திருநகர், விளாச்சேரிக்கு வாகனங்கள் செல்கின்றன.ரோடு அடியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது.
ஒரு ஆண்டுக்கு மேலாக அக்குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ரோட்டில் வீணாகிறது.இதனால் மெகா பள்ளங்கள் ஏற்பட்டுஉள்ளன. இரவு டூவீலர், சைக்கிளில் செல்வோர் பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர். குழாய் உடைப்பையும், தார்ரோட்டையும் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.