சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள் /படம் உண்டுஅதிகாரிகள் கவனத்திற்கு...-----* ரோடு படுமோசம்மதுரை சம்பக்குளத்தில் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்டிற்கு செல்லும் ரோடு படுமோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். ரோட்டை தற்காலிகமாக சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.-டி.ஜீவன்கார்த்திக், சம்பக்குளம்.
வழிப்பறி அபாயம்மதுரை சூர்யாநகர் அருகேவுள்ள ராமன்நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தெரு விளக்குகள் போதிய அளவில் இல்லை. இரவில் ரோட்டில் நடந்து செல்ல அச்சமாக இருக்கிறது. வழிப்பறி, கொள்ளை அபாயம் உள்ளது. போதியளவு தெருவிளக்குகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-புருசோத்தமன், ராமன்நகர்.//* வேகத்தடை தேவைமதுரை மாட்டுத்தாவணியிலிருந்து மூன்றுமாவடி, அய்யர்பங்களா, உச்சபரம்புமேடு, பனங்காடி விலக்கு, ஆனையூர் வழியாக கூடல்நகருக்கு ரோடு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. சில வாகனங்கள் விபத்திற்குள்ளாகின்றன. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கு வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சோமசேகர், பனங்காடி.//