300 சவரன் கொள்ளை | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
 300 சவரன் கொள்ளை
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 மார்
2021
06:25

ஸ்ரீபெரும்புதுார்; மாம்பாக்கத்தில், 300 சவரன் நகை கொள்ளை வழக்கில், தொடர்புடைய மேலும் இருவரை, போலீசார் கைது செய்தனர்.ராஜஸ்தானைச் சேர்ந்தவர் மகேந்தர், 50. திருவள்ளூரில், நகை மற்றும் அடகுக்கடை வைத்துள்ளார். இவர், மகன் அஷிஷ், 25, சுங்குவார்சத்திரம் அருகே நகை விற்பதற்காக, 300 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு, டிச., 11ம் தேதி ஆட்டோவில் சென்றார்.ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாம்பாக்கம் பகுதியை கடந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல், ஆட்டோவை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, அஷிஷ் வைத்திருந்த, 300 சவரன் நகையை பிடுங்கி சென்றது.இதில், இரண்டு போலீசார் உட்பட ஏழு பேரை, ஸ்ரீபெரும்புதுார் போலீசார், ஏற்கனவே கைது செய்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய திவாகர், 26, கலைச்செல்வன், 25, என இருவர், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வெங்காட்டில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார், இருவரையும் கைது செய்து, 318 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்து, அவர்களை சிறையில் அடைத்தனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X