தேர்தல் இணையதளத்தில் தவறான தகவல்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
06:25

காஞ்சிபுரம்; தேர்தல் இணையதளத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கான தேர்தல் அதிகாரிகள் விபரங்கள் தவறாக உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க, எட்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.அதன்படி, பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, வீடியோ பார்க்கும் குழு, கணக்கு தணிக்கை குழு, உதவி செலவின மேற்பார்வையாளர் குழு, செலவு கண்காணிப்பு பிரிவு குழு, ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு என, எட்டு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன.மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில், 6 லட்சத்து, 41 ஆயிரத்து, 462 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து,73 ஆயிரத்து, 685 பெண் வாக்காளர்களும், 182 திருநங்கைகள் என, 13 லட்சத்து, 15 ஆயிரத்து, 329 வாக்காளர்களும் உள்ளனர்.இதில், 8,109 வாக்காளர்கள் மாற்றுத்திறனாளிகள் எனவும், 80 வயதுக்கு மேற்பட்டோர் என, 26 ஆயிரத்து, 405 பேர் எனவும் கண்டறியப்பட்டுள்ளனர்.மேலும், மாவட்டத்தில், நான்கு சட்டசபை தொகுதிகளில், 842 ஓட்டுச்சாவடி மையங்களில், 1,872 ஓட்டுச்சாவடிகள் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 172 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என, கண்டறியப்பட்டுள்ளன.நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும், காஞ்சிபுரம் அருகே, பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலை பொறியியல் உறுப்பு கல்லுாரியில், ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர் மகேஸ்வரி, மாவட்ட எஸ்.பி., சண்முகப்ரியா, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் தேர்தல் அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர்.ஓட்டு எண்ணிக்கையின் போது மேஜை அமைப்பது, கட்டுப்பாட்டு அறை, ஓட்டு எண்ணும் அறையின் அமைப்பு போன்றவை குறித்து, அங்கு ஆலோசிக்கப்பட்டது.கடந்த, 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும், 2019ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும், அண்ணா பல்கலைக்கழக கல்லுாரியிலேயே ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, அமைதியான முறையில் ஓட்டளிக்கும் விதமாக, துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார், நேற்று அணிவகுப்பு நடத்தினர்.செங்கல்பட்டு ஏ.டி.எஸ்.பி., பொன்ராம், வண்டலுார் டி.எஸ்.பி., அனுமந்தன், இன்ஸ்பெக்டர் முனிசேகர் உள்ளிட்டோர் தலைமையில் துணை ராணுவ வீரர்கள், போலீசார் என, 200 பேர் பங்கேற்ற ராணுவ அணிவகுப்பு, நேற்று நடந்தது. பொதுமக்கள் புகாரளிக்க திறக்கப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்:044- - 2723 6205, -2723 6206, -2723 6207, -2723 6208, 1800 425 7087.பொதுமக்கள் புகாரளிக்க திறக்கப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்:044- - 2723 6205, 044 - -2723 6206, 044 - -2723 6207, 044 - -2723 6208, 1800 425 7087தவறான பெயர்கள்தேர்தல் சம்பந்தமான விபரங்களை, வாக்காளர்கள் தெரிந்து கொள்ள, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில், www.elections.tn.gov.in என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விபரங்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் தொகுதிக்கு, ராஜலட்சுமி என்பவருக்கு பதிலாக வித்யா எனவும், ஸ்ரீபெரும்புதுார் முத்துமாதவனுக்கு பதிலாக சாந்தி எனவும், உத்திரமேரூருக்கு செல்வமதி என்பவருக்கு பதிலாக வித்யா எனவும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X