பவானிசாகர்: பவானிசாகர் தொகுதியில், ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, 374 ஆக உயர்த்தபட உள்ளது. பவானிசாகர் (தனி) தொகுதியில், இரண்டு லட்சத்து, 59 ஆயிரத்து, 118 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக, 294 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. கொரோனா பரவல் காரணமாக, சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில், ஓட்டுச்சாவடியில் எண்ணிக்கையை அதிகரிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், 1,000 ஓட்டுகளுக்கு மேல் உள்ள சாவடிகள் கண்டறியும் பணி துவங்கியது. இதன்படி பவானிசாகர் தொகுதியில் கூடுதலாக, 80 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. இதனால், 374 ஓட்டு சாவடிகளாக எண்ணிக்கை உயரவுள்ளதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.