அந்தியூர்: வாகனத்தில் மாகாளி கிழங்கு கடத்திய ஆசாமி, வனத்துறையினர் சோதனையில் சிக்கினார். அந்தியூர் வனச்சரகம், முரளி பிரிவு, செல்லம்பாளையம் வன சோதனைச்சாவடியில், வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஒரு பொலிரோ பிக்கப் வாகனத்தில், நான்கு மூட்டைகளில், 150 கிலோ எடையில் மாகாளி கிழங்குகள் இருந்தன. வேன் டிரைவர், பர்கூர், தம்புரெட்டியை சேர்ந்த முருகேசன், 37, என்பது தெரிந்தது. வனப்பகுதியில் இருந்து கடத்திக்கொண்டு, விற்பனைக்கு எடுத்துச் செல்வதாக கூறினார். வாகனத்துடன் கிழங்கை பறிமுதல் செய்தனர். அவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். ஆயுர்வேத மருத்துவத்தில், மாகாளி கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் சர்வதேச மதிப்பில், இந்த கிழங்கின் தேவை அதிகரித்துள்ளது. மலைப்பகுதிகளில் மட்டுமே இந்த கிழங்கு விளையும் என்றும், வனத்துறையினர் தெரிவித்தனர்.