கிருஷ்ணகிரி: பர்கூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினின், 68வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் தலைமை வகித்து, 68 கிலோ கேக்கை வெட்டி மக்களுக்கு வழங்கினார். கிருஷ்ணகிரி நகர, தி.மு.க., சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்த ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், நகர செயலாளர் நவாப் தலைமை வகித்து, 68 கிலோ கேக்கை வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இதில், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பரிதா நவாப், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், கிழக்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில், ஆவின் பால் பண்ணை எதிரில் நடந்த விழாவில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டது.
* அரூர் பஸ் ஸ்டாண்டில், நகர பொறுப்பாளர் மோகன் தலைமையில் நடந்த விழாவில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொதிகைவேந்தன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தமிழழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டியில் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.