கரூர்: சுவர் விளம்பரம், பேனர்களை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.,6 ல் நடப்பதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்க வேண்டும், பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என, மாவட்ட தேர்தல் அலுவலர் மலர்விழி உத்தரவிட்டார். ஆனால், ரவுண்டானா, லைட்ஹவுஸ் கார்னர், திருமாநிலையூர் ரவுண்டானா, கோவை சாலை, கரூர் - சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட பல்வேறு இடங்களில், அரசியல் கட்சியினரின் பேனர்கள், சுவர் விளம்பரம் அகற்றப்படாமல் இருந்தது. இந்த இடங்களில் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில், நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறையில் இருக்கும் நிலையில், வேட்பு மனு தாக்கல் தொடங்கவில்லை. இதனால், சுவர் விளம்பரம், பேனர்களை அகற்ற ஆகும் செலவு, அந்தந்த கட்சிகளின் கணக்கில் சேர்க்கப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.