கரூர்: கும்ப சந்தேஷ் யாத்ரா குழுவினர், நேற்று கரூர் வந்தனர். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில், பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாற்றம், கலாசாரம், ஒற்றுமை சமூக நலம் ஆகியவற்றில், மறுகட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில், கடந்த மாதம், 19ல் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து, கும்ப சந்தேஷ் யாத்ரா, 20 பேர் கொண்ட குழு, தலைவர் சீனிவாச ரெட்டி தலைமையில் புறப்பட்டது. இந்த குழு வரும், 31ல் ஹரித்துவாரில் யாத்ராவை நிறைவு செய்கிறது. இந்த குழுவினர் நேற்று அதிகாலை, கரூர் சாரதா மகளிர் கல்லூரிக்கு வந்தனர். அவர்களை கிராமியம் இயக்குனர் நாராயணன் வரவேற்றார். பிறகு, சிறிது நேரம் ஓய்வு எடுத்த யாத்ரா குழுவினர், கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றனர்.