கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, வல்லம் சாலை அருகில், மின் வினியோகம் சீராக வழங்குவதற்காக மின் மாற்றி டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி மூலம், விவசாயி களுக்கு மின் வினியோகம் நடக்கிறது. இந்த டிரான்ஸ்பார்மர் மின்கம்பம் இரண்டும் சேதமடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விளைநிலங்கள் வழியாக செல்லும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். பாதிப்படைந்த மின்மாற்றி டிரான்ஸ்பார்மர் மின்கம்பத்தை சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.