கொசு உற்பத்தி அதிகரிப்பு: பொதுமக்கள் கடும் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
14:00

கரூர்: கோடை காலம் துவங்க உள்ள நிலையில், கரூரில் கொசுக்கள் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் நகராட்சியை சுற்றி, அமராவதி ஆறு மற்றும் இரட்டை வாய்க்கால் உள்ளது. மேலும், அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலும் உள்ளது. வாய்க்கால்களில் தற்போது மழை தண்ணீருடன், சாக்கடை நீரும் செல்கிறது. இதனால், கரூர் நகராட்சி பகுதியில் பெரிய அளவிலான கொசுக்கள் உற்பத்தி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக, பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டு மொட்டை மாடி, திறந்த வெளிப்பகுதிகளில் தூங்குகின்றனர். ஆனால், கொசுக்கடியால், தூங்க முடியாமல் நிம்மதி இழந்துள்ளனர். குறிப்பாக, பழைய சணப்பிரட்டி பஞ்சாயத்து, இரட்டை வாய்க்கால் செல்லும் பகுதி, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில், வசிக்கும் பொதுமக்கள் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் தொற்றுடன், பகல் நேரத்தில் கடிக்கும், 'ஏடிஸ்' என்ற கொசுவினால், கரூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலால் பலர், பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சிலருக்கு மலேரியா காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சாக்கடை கால்வாய், வாய்க்கால் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தரமான கொசு ஒழிப்பு மருந்துகளை கொள்முதல் செய்து, முறையாக பயன்படுத்த வேண்டியதும் அவசியம்.

 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X