கடலுார்:கடலுாரில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.கடலுார் எஸ்.என்.சாவடியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் பிரபு, 35; ஆட்டோ டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். இருவர் இடையே முன்விரோதம் இருந்தது.நேற்று முன்தினம் இரவு, எஸ்.என்.சாவடி மேட்டுத்தெருவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தங்கபாண்டியன் உட்பட 3 பேர், பிரபு தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தனர். புகாரின் பேரில், திருப்பாதிரிபுலியூர் போலீசார், தங்கபாண்டியன் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்க டி.எஸ்.பி., சாந்தி மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.