தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறினால் சிறை! அச்சக உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
22:20

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அச்சக உரிமையாளர்கள், தேர்தல் விதிமுறை மீறி போஸ்டர்கள் அச்சிட்டால், கைது செய்து சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.



விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், சட்டசபை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து அச்சக உரிமையாளர்கள் மற்றும் பதிப்பகத்தாரர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். எஸ்.பி., ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் அண்ணாதுரை பேசியதாவது;-தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 26ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சகங்களில் அச்சடிக்கப்படும் அரசியல் கட்சிகள் தொடர்புடைய விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள், விளம்பர பதாகைகள் மற்றும் இதர வகைகளில் அச்சடிக்கப்படும் ஆவணங்கள் ஆகியவைகளில் அச்சகத்தின் பெயர், முகவரி (தொலைபேசி எண்ணுடன்) மற்றும் வெளியிடுபவரின் விவரங்களுடன் பிரசுரிக்க வேண்டும்.



மேலும், அரசியல் கட்சி விளம்பரங்கள் அச்சடிப்பதற்கு முன் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினரிடம் ஒப்புதல் பெற வேண்டும். அப்படி ஒப்புதல் பெற்ற கடிதத்தை கொடுத்தால் மட்டுமே, அச்சக உரிமையாளர்கள் விளம்பரங்களை அச்சிட வேண்டும். தவறினால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.



தனிப்பட்ட நபர்கள் குறித்து விமர்சனம் செய்து, அச்சிடக்கூடாது. அப்படி தனிநபர் குறித்து விமர்சித்து போஸ்டர்கள் அச்சிடப்பட்டால், சம்மந்தப்பட்ட அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, உரிமையாளர் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.



மேலும், எத்தனை போஸ்டர்கள் அச்சிடப்படுகிறது என்றும், அதற்கான செலவு தொகை கணக்கு மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ள வார்த்தைகளை மட்டுமே அச்சிட வேண்டும். அவற்றில் எந்தவித திருத்தங்களையும் அச்சக உரிமையாளர்கள் செய்யக்கூடாது.



எஸ்.பி., ராதாகிருஷ்ணன் பேசியதாவது;அரசியல் கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களில் தனிநபர் மீம்ஸ், கார்ட்டூன்களை தவிர்க்க வேண்டும். இதனால், தேர்தல் காலத்தில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். அப்படி, கார்ட்டூன் மற்றும் மீம்ஸ் அச்சிடக்கூறும் நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.



ஒவ்வொரு அச்சகத்தின் முன்பு, அரசியல் விளம்பரங்கள் அச்சிடுவதற்கு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என தகவல் பலகை வைக்க வேண்டும் என்றார்.அப்போது, டி.எஸ்.பி.,க்கள் அஜய்தங்கம், ரவீந்திரன், பாலசந்தர், ராதாகிருஷ்ணன் மற்றும் அச்சக உரிமையாளர்கள் மற்றும் பதிப்பகத்தாரர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X