கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கோர்ட் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கினை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ஏழுமலை,32; துப்புரவு பணியாளரான இவர், கடந்த 1ம் தேதி காலை 8.30 மணியளவில் கள்ளக்குறிச்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில், டிஎண்15 இஸட் 4559 என்ற பதிவெண் கொண்ட ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் வாகனத்தை நிறுத்தியுள்ளார். பணி முடிந்து சென்று பார்த்த போது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், ஏழுமலை அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.