காலில் காயமடைந்த மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
காலில் காயமடைந்த மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 மார்
2021
23:11

விழுப்புரம் ; காலில் காயமடைந்து தவித்த மயிலை வி.ஏ.ஓ., மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.



விழுப்புரம் அடுத்த குமாரகுப்பம் கிராமத்தில் நேற்று மாலை 3.00 மணிக்கு மயில் ஒன்று, காலில் அடிபட்ட நிலையில், நடக்க முடியாமலும், பறக்க முடியாமலும் தவித்துக் கொண்டிருந்தது.தகவலறிந்த வி.ஏ.ஓ., உத்திரவேல், மயிலை மீட்டு, விழுப்புரம் வனத்துறையை சேர்ந்த வனக்காவலர் தர்மனிடம் ஒப்படைத்தார்.மயிலுக்கு சிகிச்சை அளித்து குணமடைந்த பின், காப்பு காட்டில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X