அதிக பாரத்துடன் செல்லும் கரும்பு வாகனங்களால் ஆபத்து!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
23:15

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் பகுதியில் அதிகளவு கரும்புகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் நீடித்து வருகிறது.



ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் அதிகளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. நன்கு வளர்ந்த பிறகு, கரும்பினை அறுவடை செய்து, கச்சிராயபாளையம் அல்லது மூங்கில்துறைப்பட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு கொண்டு செல்வது வழக்கம்.



இதில் விவசாயிகள் செலவினை கட்டுப்படுத்துவதற்காகவும், வாகன உரிமையாளர்கள் கூடுதல் லாபத்திற்காகவும் லாரி மற்றும் டிராக்டர் டிரெய்லரில் அளவுக்கு அதிகமாக கரும்பு ஏற்றி செல்வதை விவசாயிகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால், வாகனத்தின் அகலத்தை மீறி இருபுறங்களிலும் கரும்புகள் சாய்ந்தவாறு செல்கிறது.



ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் இருவழியாகவும், கிராமப்புற சாலைகள் ஒரு வழியாகவும் உள்ளன. இந்த வழித்தடத்தில் அதிகளவு பாரத்துடன் கரும்பு லோடு வாகனங்கள் செல்லும்போது மின் ஒயர்கள் மீது உராசியும், சாலையோர மரங்களின் மீது மோதி சரிந்தும், விபத்து ஏற்படுகிறது.



இதை தவிர்க்க டிரைவர்கள் நடுரோட்டிலேயே வாகனத்தை ஓட்டி செல்கின்றனர். இதனால் எதிர்திசையில் வருபவர்களும், முந்தி செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக ஆபத்தான வளைவு பகுதிகளில் அதிகளவு விபத்து ஏற்படுகிறது. கிராமபுறங்களில் சாலையை அடைத்தவாறு கரும்புலோடு வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.



அதிகளவு பாரத்தை ஏற்றுவதால் வாகனத்தின் டயர்கள் அதிக வெப்பமாகி வெடித்தும், அச்சு முறிந்து டயர் தனியாக சென்றும் விபத்து ஏற்படுகிறது. ரிஷிவந்தியம் அடுத்த கடம்பூர் கிராமத்தில் இருந்து அதிகளவு கரும்புகளை ஏற்றிக்கொண்டு, மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு டிராக்டர் டிப்பர் சென்றது. மரூர் அருகே சென்ற போது, அதிகபாரத்தை தாங்க முடியாமல் டிரெய்லரின் முன்புற டயர்கள் வெடித்து, கழன்றுள்ளன.



இதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சற்று துாரம் இழுத்து சென்று, சாலையிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அச்சமயத்தில் எதிர்திசையில் வாகனங்கள் வந்திருந்தால் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும்.உடன் வேறொரு டிராக்டர் டிரெய்லர் கொண்டுவரப்பட்டு, கரும்புகள் மாற்றப்பட்டன. எனவே, போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிகளவு கரும்பு ஏற்றி செல்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X