உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., தலைமையில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினருடன் அணிவகுப்பு நேற்றுநடந்தது.
சட்டசபை தேர்தல் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடத்துவதற்காக, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 100 பேர் உளுந்துார்பேட்டை தொகுதிக்கு வந்துள்ளனர். இதையொட்டி பொதுமக்களிடம் அச்ச உணர்வை போக்கவும், பாதுகாப்புடன் தேர்தல் நடத்தப்படும் என்பதை வலியுறுத்தியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொடி அணி வகுப்பு நடந்தது.
இதில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை டி.எஸ்.பி., சேகர், உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., விஜயகுமார் ஆகியோர் தலைமையில் பங்கேற்றனர். உழவர் சந்தையில் இருந்து நகரின் முக்கிய பகுதிகள் வழியாக அணிவகுப்பு நடந்தது.இன்ஸ்பெக்டர்கள் சிங், ரவிச்சந்திரன் உட்பட போலீசார் பலர் உடனிருந்தனர்.