தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம்; கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம்; கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 மார்
2021
23:18

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தை கலெக்டர் ஆய்வு செய்து, அருகில் உள்ள பாழடைந்த கட்டடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



ரிஷிவந்தியம் தொகுதி சட்டசபை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம், பகண்டைகூட்ரோடு பி.டி.ஓ., அலுவலகம் பின்புறம் உள்ள வட்டார சேவை மைய கட்டடத்தில் துவங்கப்பட்டுள்ளது. இங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அறை,கட்டுப்பாட்டு அறை, கூட்ட அரங்கம் ஆகியவற்றிற்கான இடங்கள் உள்ளன.



இந்த கட்டடத்தின் இட வசதி, உள் கட்டமைப்பு வசதி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வேட்பாளர்கள் வந்து செல்லும் வகையில் உள்ளதா என்பதை கலெக்டர் கிரண்குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு அருகில் பாழடைந்த நிலையில் இருந்த கட்டடத்தை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.



தொடர்ந்து அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 374 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மிண்ணனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, பாதுகாப்பான முறையில் வைக்க போதுமான இட வசதி உள்ளதா என ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜாமணி, உதவி அலுவலர்கள் பாண்டியன், ராஜாராமன், சையத்காதர் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X