மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கானாங்காட்டில் பொதுமக்களிடம் பட்டா மாற்றி தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபடும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த கானாங்காட்டில் பொதுமக்களிடம் நிலம், வீடு, இடம் போன்ற வைகளுக்கு இடங்களை பட்டா மாற்றி தருவதாக கூறி பலரிடம் புரோக்கர்கள் பணம் வசூல் செய்து ஏமாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து கேட்டால் மாற்றித் தருகிறேன் என காலம் கடத்தி வருகின்றனர்.இதுபோன்று பலரிடம் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. புரோக்கர்கள் இந்த வேலையில் ஈடுபடுவது வருவாய்துறைக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
வருவாய்துறை அதிகாரிகள் தெரிந்து நடப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.இதுபோல் சங்கராபுரம் வட்டத்தில் உள்ள கிராமங்களில் புரோக்கர்கள் அதிகரித்து வருகின்றனர். எனவே பட்டா மாற்றி தருவதாக கூறி ஏமாற்றி வரும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.