வேகம் வேண்டும்! ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணி:எல்.ஆர்.ஜி., கல்லூரியில் கலெக்டர் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

03 மார்
2021
02:32
பதிவு செய்த நாள்
மார் 03,2021 00:52

திருப்பூர்:''ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணியை, இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும்,'' என, மாவட்ட தேர்தல் அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான, ஓட்டு எண்ணிக்கை மையம், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் அமைக்கப்பட உள்ளது.


மாவட்ட தேர்தல் அலுவலர் விஜயகார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், எஸ்.பி., திஷா மிட்டல், டி.ஆர்.ஒ., சரவணமூர்த்தி உள்ளிட்டோர், ஓட்டு எண்ணிக்கை மைய அமைவிடங்களை நேற்று ஆய்வு செய்தனர்.திருப்பூர் வடக்கு, பல்லடம் தொகுதிகளுக்கு, தற்போதுள்ள பழைய கட்டட வளாகத்தின் தரைத்தளத்திலும், அவிநாசிக்கு முதல் தளத்திலும் அமைகிறது.


அண்ணா நுாற்றாண்டு விழா கட்டடத்தின் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில், மடத்துக்குளம் தொகுதி, இரண்டாவது தளத்தில் உடுமலைக்கும் மையம் அமைகிறது.தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள புதிய கட்டடத்தில், திருப்பூர் தெற்கு தொகுதி, தேர்தல் பார்வையாளர் அறை அமைக்கும், வடகிழக்கில் உள்ள கட்டடத்தில், தாராபுரம் மற்றும் காங்கயம் தொகுதிகளுக்கும் எண்ணிக்கை மையம் மற்றும் 'ஸ்ட்ராங் ரூம்' அமைகிறது.


ஓட்டு எண்ணிக்கை மையம் குறித்து, டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, தேர்தல் தாசில்தார் முருகதாஸ் உள்ளிட்டோர் அமைவிடங்களை விளக்கினர்.அதன்பின், கலெக்டர் கூறியதாவது:கொரோனா ஊரடங்கு தொடர்வதால், சமூக இடைவெளியுடன் ஓட்டு எண்ணிக்கை மையம் அமையும். போதிய இடசவசதி இருந்தால், 14 டேபிள் அமைக்கப்படும். இடநெருக்கடி இருந்தால், தலா, ஏழு டேபிள் வீதம் இரண்டு அறைகளில் எண்ணிக்கை மையம் அமைக்கப்படும்.கல்லுாரி மாணவியருக்கு, 'ஆன்லைன்' மூலம் தேர்வு நடத்தப்படும். தற்போது, ஆய்வகங்கள் ஓட்டு எண்ணிக்கை மையமாக மாற்றப்பட உள்ளதால், அங்குள்ள அனைத்து பொருட்களையும் பாதுகாப்பாக வைக்க, மூன்று 'ெஷட்' அமைக்கப்படும்.


கல்லுாரியின் பழைய கட்டட வளாகம் காலாவதியாகிவிட்டதால், விரைவில் இடித்து புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.அதனால், ஆய்வகங்கள் எண்ணிக்கை மையமாக மாற்றப்பட உள்ளன. பொதுப்பணித்துறையினர் முகாமிட்டு, ஓட்டு எண்ணிக்கை மையம், 'ஸ்ட்ராங் ரூம்'கள் என, அனைத்து பணிகளையும், இம்மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.


38 சுற்று வரை நீளும்!திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 3,343 ஓட்டுச்சாவடி அமைய இருப்பதால், ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கூடுதல் வசதி செய்யப்படுகிறது. 'டேபிள்' எண்ணிக்கை அதே அளவு இருக்கும். அதிகபட்சமாக, 25 சுற்றுகள் வரை எண்ணப்படும் நிலை மாறி, இம்முறை, 38 சுற்றுகள் வரை நடத்த வேண்டியிருக்கும் என, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X