அனுப்பர்பாளையம்:திருப்பூர், அவிநாசி ரோடு, தண்ணீர் பந்தல் காலனியில் மொபைல் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாநகராட்சி, முதலாம் வார்டு, தண்ணீர் பந்தல் காலனி - வீரப்ப செட்டியார் வீதியில், ஒருவர் தன் வீட்டின் மேல் மொபைல் டவர் அமைக்க அனுமதி அளித்து, அதற்கான பணிகள் நடக்கிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று, பெண்கள் உட்பட 150 க்கு மேற்பட்டோர் நேற்று, சம்பந்தப்பட்ட வீட்டு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கூறிய ஆலோசனையால், கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க சென்றனர்.