ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகாய் செடிகள் தற்போது பூ பூத்து காய்கள் காய்த்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால், மிளகாய் செடிகளில் உள்ள பூக்கள் பனி தாக்கத்தால் பாதிப்படைந்து, பூ மொட்டுக்கள் பெரும்பாலும் பனியால் விரிவடைய முடியாமல், செடிகளில் வெம்பி உதிர்ந்து விடுகின்றன.பூக்கள் காய்களாக மாறினால் மட்டுமே விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.