திருவாடானை : தொண்டி அரசு தொடக்கப்பள்ளியில் (மேற்கு) பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கம் சார்பில் திறனறிவு தேர்வு நடந்தது.
எழுத படிக்க தெரியாத வயது வந்தோர்களுக்கு எழுத, படிக்க போதுமானதிறனை வளர்க்கும் வகையில் வகுப்புகள் நடத்தப்பட்டு அதன்பின் தேர்வு நடந்தது. மாவட்ட திட்ட அலுவலர் ஆரோக்கியசாமி பார்வையிட்டார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், வட்டார கல்வி அலுவலர் தமிழரசி, ஆசிரிய பயிற்றுநர் பிரகாஷ்கண்ணன் ஆய்வு செய்தனர். தலைமையாசிரியர் சாந்தி தலைமையில் ஆசிரியர்கள்தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.