உடுமலை:தென்னை மரங்களுக்கான நுண்ணுாட்டத்தின் தேவை குறித்து, வாணவராயர் வேளாண் கல்லுாரி, இளங்கலை மாணவியர், கொங்கல்நகரம் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், பொள்ளாச்சி, வாணவராயர் வேளாண் கல்லுாரியில், நான்காம் ஆண்டு, இளங்கலை வேளாண்மை படிக்கும், மாணவியர், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், பயிற்சி பெற்று வருகின்றனர். அதன்படி, விளைநிலங்களில், நேரடி கள ஆய்வு செய்து, வேளாண்துறையினர் உதவியுடன், விவசாயிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களும் வழங்கி வருகின்றனர். அவ்வகையில், கொங்கல்நகரம் கிராமத்தில், தென்னை விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.தென்னை மரங்களுக்கு நுண்ணுாட்டங்கள்; வேர் உரங்கள், அவற்றை செலுத்தும் முறை; உளுந்து சாகுபடியில், விதை நேர்த்தி முறை, விதைப்பு குறித்து, மாணவிகள் விளக்கமளித்தனர். வட்டார வேளாண்துறையின், வேளாண் அலுவலர் சுனில்கவுஸ், உதவி வேளாண் அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.