மண்டல தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை: ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2021
01:49

உடுமலை:உடுமலை தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.சட்டசபை தேர்தலுக்கு, உடுமலை தொகுதியில், 380 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிகள், 37 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டல தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மண்டல அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம், உடுமலை தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. கோட்டாட்சியர் கீதா தலைமை வகித்தார். தாசில்தார் ராமலிங்கம், தேர்தல் பிரிவு தாசில்தார் கிருஷ்ணவேணி, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.இதில், மண்டல அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள, ஓட்டுப்பதிவு மையங்கள் மற்றும் ஓட்டுச்சாவடிகள்,வழித்தடங்கள் குறித்து விளக்கப்பட்டது. மண்டல அலுவலர்கள்,தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளை முன்னதாகவே சென்று, மின் வசதி, கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றுவது, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைப்பது மற்றும் தேர்தல் முடிந்ததும் சேகரித்து வருவது, ஓட்டுப்பதிவு நிலவரங்கள், அவ்வப்போது தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.தேர்தல் பணிகளை குறிப்பிட்ட நேரத்திற்கு மேற்கொள்வது, ஓட்டுச்சாவடிகளில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் மொபைல் எண்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் தொடர்பு எண்கள் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X