தே.மு.தி.க., பிரமுகர் கொலை: பின்னணியில் யார்?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2021
01:51

அனகாபுத்துார்:அனகாபுத்துாரில், தே.மு.தி.க., பிரமுகரை, மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு துாண்டிய அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.



சென்னை, பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்துாரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 36; தே.மு.தி.க., நகர துணை செயலர். அதே பகுதியில், 'டெய்லர்' கடை நடத்தி வந்தார்.நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டி, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அனகாபுத்துார், பேருந்து நிலையம் அருகே சென்றபோது, வாகனத்தை வழிமறித்த இருவர், மறைத்து வைத்திருந்த கத்தியால், ராஜ்குமாரின் தலையில் சரமாரியாக வெட்டி தப்பினர்.



அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜ்குமாரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.



இது குறித்து, போலீசார் கூறியதாவது:அனகாபுத்துார், டோபிகான தெரு, ஜே.என்., சாலை சந்திப்பில், அரை கிரவுண்ட் ஆற்றங்கரை புறம்போக்கில், ஒருவர், கடை மற்றும் வீடு கட்டி வாடகைக்கு விட்டிருந்தார்.அந்த கட்டடம், 2018ல், வருவாய் துறையினரால் இடிக்கப்பட்டது. இந்நிலையில், அனகாபுத்துாரை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர், எட்டு மாதங்களுக்கு முன், அந்த இடத்தில், பெட்டி கடை வைத்து, ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.



அப்போது, ஏற்கனவே கட்டடம் கட்டியிருந்த நபருக்கு ஆதவராக, ராஜ்குமார் சென்றுள்ளார். இதனால், ராஜ்குமாருக்கும், அரசியல் பிரமுகருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ராஜ்குமார் மீது கோபம் கொண்ட அந்த அரசியல் பிரமுகர், ராஜ்குமாரை கொலை செய்யும் படி, தன்னுடன் இருந்த ரஞ்சித் என்பவரிடம் கூறியதாகவும், அதற்கு தேவையான பண உதவியை அளிப்பதாகவும், போலீசார் துன்புறுத்தாமல் பார்த்துக் கொள்வதாகவும் கூறியதாக தெரிகிறது.



மேலும், சிறையில் இருந்து வெளியே அழைத்து வர, வழக்கறிஞர்களை வைத்து உதவுவதாக வும், ஆக்கிரமிக்கும் இடத்தில் அலுவலகம் கட்டி, கட்சியில் பதவி வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.இதையடுத்து, ரஞ்சித், தனது நண்பர் காட்டன் சதீஷுடன் சேர்ந்து, ராஜ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டு, 10 நாட்களுக்கு முன், பல்லாவரம் சந்தைக்கு சென்று, கத்தியை வாங்கி வந்து, வீட்டில் மறைத்து வைத்து, கொலை செய்தது தெரியவந்தது.



நேற்று காலை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே பதுங்கியிருந்த சதீஷ் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கொலை செய்ய துாண்டிய அரசியல் பிரமுகரை, தேடி வருகிறோம்.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X