தீப்பிடித்து எரிந்த கார் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
தீப்பிடித்து எரிந்த கார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 மார்
2021
02:25

திருத்தணி:சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாகஓட்டுனர் உயிர் தப்பினார்.



திருத்தணி, கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் முனிராமையா மகன் பாலாஜி, 20. இவர், நேற்று மதியம், நண்பர் அருணாசேகர் என்பவரிடம் இருந்து, 'ரொனால்டு டஸ்டர்' காரை வாங்கிக் கொண்டு திருமண அழைப்பிதழ் வைப்பதற்கு, திருத்தணியில் இருந்து, அரக்கோணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.காரை, பாலாஜி ஒருவர் மட்டுமே ஓட்டிச் சென்றார்.



இந்நிலையில், திருத்தணி, வள்ளியம்மாபுரம் அருகே செல்லும் போது கார் இன்ஜினில் இருந்து புகை வந்ததை பார்த்தவுடன், பாலாஜி சாலையோரம் காரை நிறுத்திவிட்டு இறங்கி அங்கிருந்து சிறிது துாரம் ஓடி நின்றார்.பின், கார் முழுதும் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும், திருத்தணி தீயணைப்பு துறையினர் வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுதும் எரிந்தது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X