93 துப்பாக்கிகள் ஒப்படைப்பு | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
93 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 மார்
2021
02:42

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், 93 பேர், தங்களது துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.


சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு காரணமாக, போலீசிடம் கேட்டு, பலரும் துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி, துப்பாக்கிகளை, அருகில் உள்ள போலீஸ் நிலையம் அல்லது எஸ்.பி., அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர்.



காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், முன்னாள் காவல் துறை அதிகாரிகள் என, பலரும் துப்பாக்கி வைத்துள்ளனர். மாவட்டம் முழுதும், 162 பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.இதில், 93 பேர் , நேற்று முன்தினம் வரை துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைத்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.



மீதமுள்ளவர்கள், உடனடியாக ஒப்படைப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு திரும்ப ஒப்படைக்காத நிலையில், அவர்களின் வீடுகளுக்கே சென்று, துப்பாக்கிகள் பெறப்படும் என, போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X