4 தொகுதிகளில் 10 ஆண்டுகளில்வாக்காளர்கள் அதிகரிப்பு | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
4 தொகுதிகளில் 10 ஆண்டுகளில்வாக்காளர்கள் அதிகரிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 மார்
2021
02:47

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு தொகுதிகளிலும், 10 ஆண்டுகளில், 4.33 லட்சம் வாக்காளர்கள் உயர்ந்துள்ளனர்.



காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் என, நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன.இதில், அதிக வாக்காளர்கள் உடைய தொகுதியாக, ஆலந்துார் உள்ளது. அங்கு, 3.89 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.



ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சிறப்பு வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்களில், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் அளித்து வருகின்றனர்.பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிப்போரில், அதிகபட்சமாக முதல் வாக்காளர்களாக, 19 வயதுடையோராக இருப்பர். சிலர் மட்டுமே, தொகுதி மாறி குடியேறுவதால், வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டிய கட்டாயம் வரும்.



அந்த வகையில், ஒவ்வொரு தொகுதியிலும், 10 ஆண்டுகளில், கணிசமான அளவில், வாக்காளர்கள் உயர்ந்துள்ளனர். கடந்த, 2011 சட்டசபை தேர்தலைவிட, 2021ல் நடைபெறும் இந்த தேர்தலில், நான்கு சட்டசபை தொகுதிகளில், 4 லட்சத்து, 33 ஆயிரத்து, 557 வாக்காளர்கள் உயர்ந்துள்ளனர். அதிகபட்சமாக, ஆலந்துார், 1.5 லட்சம் வாக்காளர்கள் உயர்ந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X