வாலாஜாபாத்:பிற துறை வாகனங்களை, தேர்தல் பணிக்கு ஒப்படைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்தால் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி, சமூக நலம், வேளாண், தோட்டக்கலை உள்ளிட்ட பல துறைகள் உள்ளன.
இத்துறைகளில் இருக்கும் உயரதிகாரிகள் பயன்படுத்தும், ஜீப் வாகனங்களை தேர்தலுக்கு உபயோகப்படுத்தப்பட உள்ளது.இதனால், அரசு ஜீப் வாகனங்களை ஒப்படைக்கும் படி, மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.விரைவில், வாகனங்கள், தேர்தல் பணிக்கு, உபயோகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.