பூட்டிய ஓட்டுச்சாவடியில் சைக்கிள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2021
02:49

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு சட்டசபை தொகுதியில், ஓட்டுச்சாவடி மையங்களை அமைப்பதற்காக, ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.



இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அமைக்கப்பட உள்ள ஓட்டுச்சாவடி மையத்தை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி, ஆய்வு செய்ய வந்தார்.அப்போது, ஸ்ரீபெரும்புதுார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் பலர், அங்கிருந்தனர்.



ஸ்ரீபெரும்புதுார் அரசு பள்ளியின் உள்ளே நுழைந்த கலெக்டர் மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரியை, ''இங்க வா, நீ என்ன செஞ்சிட்டு இருக்க. இதை திற'' என, ஒருமையில் பேசினார். இதையடுத்து, ஓட்டுச்சாவடி மையமாக செயல்பட உள்ள பள்ளியின் வகுப்பறை காண்பிக்கப்பட்டது.பூட்டியிருந்த அந்த அறையின் கதவை திறந்தபோது, அறை முழுவதும், தமிழக அரசு, மாணவர்களுக்கு வழங்க கொடுத்த, 80க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன.



இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அங்கு புகைப்படம் எடுத்து கொண்டிருந்த நிருபர்களை, ''இதையெல்லாம் புகைப்படம் எடுக்கக்கூடாது'' என, மிரட்டல் தொணியில் கூறினார். இதையும் மீறி, புகைப்படம் எடுத்த, நம் நிருபரின் கேமராவை, கலெக்டரின் பாதுகாவலர் மறித்து, புகைப்படம் எடுப்பதை தடுத்தார்.



பின், அதே பள்ளியின், வேறு அறைகளை பார்வையிட்ட கலெக்டர் மகேஷ்வரி, ஸ்ரீபெரும்புதுார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசனை, ஒருமையில் கோவத்துடன் சாடினார். ''மாவட்ட தேர்தல் அலுவலரான நான், பார்வையிட வருவதை அறிந்தும், முறையாக ஏற்பாடு செய்யாதது குறித்து, எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும்'' என, கோவத்துடன் கூறிய கலெக்டர் மகேஸ்வரி, அங்கிருந்து புறப்பட்டார்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X