விவசாய நிலங்களில் வெடிமருந்து 'விளைவிக்க' முயற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2021
03:08

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக நீர்நிலைகள் மற்றும் அணைகள் உள்ள பகுதி பழநிதான். அருகிலேயே குதிரையாறு, பாலாறு - பொருந்தல், குதிரையாறு என அணைகள் உள்ளன.



இத்தகைய சிறப்பும், இயற்கை செழிப்பும், எழில் கொஞ்சும் அழகும் நிறைந்த பகுதியில் உருவாக உள்ளது வெடிமருந்து தொழிற்சாலை.பழநி அருகே தாதநாயக்கன் பட்டி கிராமத்தில், ஐவர்மலையின் கிழக்கு பகுதியில் 250 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியை பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் (எஸ்.யூ.ஏ., பார்ம்ஸ்) செய்து முடித்துள்ளது. 5 கி.மீ., சுற்றளவில் நிலங்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன.முன்பக்கம் ஐவர் மலை இதற்கு வசதியாக அமைந்துள்ளது. பெரிய ஐவர்மலைக்கு பின்புறம் இந்த வேலைகள் நடக்க உள்ளன. 'விவசாய பண்ணை' என்ற பெயரில் வெடிமருந்து தொழிற்சாலை துவக்க ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.



பலநுாறு டன் கணக்கில் வெடிமருந்து பொருட்களை சேமித்து வைக்கவும், வெடிபொருட்கள் உற்பத்தியை துவக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அந்த நிறுவனத்தின் பெயரில் பத்திர பதிவு நடந்துள்ளது.சாதாரண கல் குவாரிகளில் வெடி வைக்கும் போது பல கிலோமீட்டர் தொலைவில் அதிர்வுகள் ஏற்படும். இதனால் பல கிராமங்களில் எதிர்ப்பு கிளம்புகிறது. அவ்வாறு இருக்கையில் பலநுாறு டன் 'நைட்ரேட்' வகை வெடிமருந்து பொருட்களை சேமிப்பது, உற்பத்தி செய்வதால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அவ்விதமான பிரச்னை உருவானால் ஏற்படும் புகை பல கிலோ மீட்டருக்கு பரவும் வாய்ப்புள்ளது.



பாதிப்பு ஏற்படுமா : இதற்கு சிவகாசியில் அடிக்கடி நிகழும் வெடிவிபத்துகள், பல ஆண்டுகளுக்கு முன் துறையூர் வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்துகள் முன்மாதிரியாக உள்ளன. பலநுாறு டன் எனும்போது, பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பதில் கொஞ்சம் அசட்டையாக இருந்தால்கூட, அருகில் உள்ள விவசாயம் சார்ந்த தொழில்கள் பாதிக்க வாய்ப்புள்ளது.தொழிற்சாலை அமையும் பகுதி அருகிலேயே சில கி.மீ., தொலைவில் புதிய 6 வழி சாலை அமைக்கும் பணி நடக்கிறது. மேலும் சில கி.மீ., தொலைவில் குதிரையாறு அணையும் உள்ளது. இங்கிருந்து தண்ணீரை பயன்படுத்தவும் திட்டமிட்டு உள்ளனர். இதனால் நிலத்தடி நீர் மாசுபடவும், கோடையில் அணை வறண்டு போகும் சூழலும் உருவாகலாம்.



யாருக்கும் எதுவும் தெரியவில்லை : இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு எதுவும் தெரியவில்லை. அந்த நிறுவனமோ, அனுமதி அளிக்கும் அரசோ மக்களிடம் தெரியப்படுத்தவு மில்லை. முழுக்க முழுக்க விவசாயப் பணி, பண்ணை என்ற பெயரிலேயே நிலம் பெற்றுள்ளனர். தொழிற்சாலை கட்டுமான பணிகள் நடந்தால் கூட அவை வெளியில் தெரியா வண்ணம் சுற்றிலும் விவசாய நிலங்களாக இருப்பதால் அந்தப் பணிகளும் எளிதாக நடைபெறும்.பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் அம்மாநிலத்தில் தொழிற்சாலையை அமைக்காமல் தமிழகம் வந்தது ஏனென்று தெரியவில்லை.



தொழிற்சாலை உருவாகி பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது வரவேற்கக் கூடிய அம்சமே. ஆனால் பாதுகாப்பு அதைவிட முக்கியம். இதற்காக விவசாய நிலத்தையும், நீராதாரத்தையும் பலிகடாவாக்கி விடக்கூடாது. தற்போது தொல்லியல்துறை, தீயணைப்புத் துறை, போலீஸ், வருவாய் என பல்வேறு துறைகளிடமும் அனுமதி பெறுவதில் நிர்வாகம் தீவிரமாக உள்ளது.மாவட்ட அதிகாரிகளிடம் அதற்காக விண்ணப்பித்து வருகிறது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X